Friday 1 February 2013

சிந்தா சோட் சிந்தாமணி


CHINTA CHHOD CHINTAMANI


சிந்தா சோட் சிந்தாமணி (கவலையை விடு சிந்தாமணி)


இந்திய நாடகங்களுக்கு உயிரூட்டிக்கொண்டிருக்கும் ஒரு சில நாடகக் குழுக்கள் மும்பையில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.அவற்றில்  சில நாடங்கள் பற்றி நாம் தொடர்ந்து பார்ப்போம்.
இது ஒரு தந்தையின் கவலை.இது ஒரு ஹிந்தி நாடகம்.
 அவருக்கு தன வாரிசுகள் முழுச்சீரழிவின் வாயிலில் நிற்கிறார்கள் என்ற எண்ணம்.அவர்கள் தம் சுகத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்; அவர்கள் விதி தவிர்க்கமுடியாத வீழ்ச்சி தான். இது அவர் கருத்து.அவருடைய மக்களோ இது வெறும் தலைமுறை இடைவெளி தான்;கிழவருக்கு சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறார்கள்.
அது உண்மையில் ஒரு தலைமுறை இடைவெளி தான? இல்லை தவறான கண்ணோட்டமா? அது தலைமுறை இடைவெளி தான் எனில் யார் அதற்க ப் பால்மிடுவது?
சிந்தா சோட் சிந்தாமணி சமகால சமூகச் சித்திரத்தை அருமையாக வெளிக்காட்டுகிறது.
வசந்த் கனிட்கர் எழுதி ஓம் கடாரே இயக்கியுள்ள இந்த நாடகத்தில்  ஓம் கடாரேவுடன் , முகேஷ் யாதவ் பரோமிடா சட்டர்ஜி முகுந்த் பட் ,அசோக் ஷர்மா பிரியங்கா பாஸு முதலியோர் நடித்துள்ளனர்.